திருப்பூரில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட கண்காணிப்பு பணியில் 900 போலீசார்கள்


ஆங்கிலப் புத்தாண்டு, 2020ம் ஆண்டு இன்று இரவு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டை வரவேற்க பலரும் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். கொண்டாட்டதில்  மது அருந்திவிட்டு இரவில் விதிமீறி வாகனங்களை ஓட்டுவதால்விபத்துகள் அதிகமாகிறது. ஆண்டின் துவக்க நாளிலேயே விபத்துகளும், உயிர்ப்பலிகளும் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பதால், புத்தாண்டை விபத்து, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல், ஆண்டை வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தில், மாநகர போலீசார் தயாராகி உள்ளது. இதையொட்டி, போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தலைமையில், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் புத்தாண்டையொட்டி செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. துணை கமிஷனர் பத்ரிநாராயணன் கூறுகையில் 'ஓவர் ஸ்பீடு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், 'ஈவ்டீசிங்' உள்ளிட்டவை கண்காணிக்கப்பட உள்ளது. அதிவேகத்தை கட்டுப்படுத்த பிரதான ரோட்டில் 'பேரிகார்டு' மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.ஏற்கனவே, 10 போலீஸ் 'செக்போஸ்ட்' உள்ள நிலையில், கூடுதலாக, ஒன்பது அமைக்கப்படும். கண்காணிப்பு பணியில், ஆயுதப்படை போலீசார் உட்பட ஏறத்தாழ, 900 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image