எஸ்.சி.எம். நிறுவனத்தில் வேலை செய்யும் லடாக் பெண் ; பிரதமர் மோடி பாராட்டு


இந்த ஆண்டின் இறுதி மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ' மத்திய அரசின்  ஹிமாயத் திட்டத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் பல்வேறு பகுத களுக்கும்  சென்று சிறப்பாக பணி புரிவதாகவும், தொழில் முனைவோராக இருப்பதாகவும் கூறினார்.  மேலம்  அவர், ' திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கார்கிலை சேர்ந்த பர்வீன்  பாத்திமா என்ற பெண் சூப்பர்வைசராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.  சுயசார்புடன் வாழ்க்கை தரத்தை முன்னேற்றி கொண்டு உள்ளார் எனவும் மோடி கூறினார்.



இதை தொடர்ந்து திருப்பூரில் உள்ள  எஸ்.சி.எம்., பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த பர்வீன் பத்திமாவிடம் பேசினோம். அவர் பேசுகையில் 'இத்திட்டத்தின்  மூலமாக பயிற்சி பெற்று தற்பொழுது திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் மேற் பார்வையாளராக  பதவி பெற்று தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளார்  என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து பர்வீன் பாத்திமா விற்கு நேரடியாக தொலைபேசி மூலம்  அழைத்த பிரதமர் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  இது குறித்து பேசிய பர்வீன் பாத்திமா பிரதமர் தன்னிடம் தொலை பேசியில்  பேசிய தருணம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும் தனது பணி குறித்து கேட்டறிந்த  தாகவும் தெரிவித்தார்.  மேலும் தங்கள் ஊரில் இதுபோன்ற பணிகள்  மற்றும் தொழிற்சாலைகள் மேம்பாட்டு வசதிகள் இல்லாததாலேயே தமிழ்நாட்டிற்கு  வந்து வேலை பார்ப்பதாகவும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் நிறுவனத்தில்  பணியாற்றும்  அனைவரும் இனிமையாக பழகுவதாகவும் வேலைகளுக்கான பயிற்சியும் சிறப்பாக கொடுத்ததாகவும் தெரிவித்தார். தனது பெற்றோர் இவ்வளவு  தூரம் சென்று பெண் வேலை பார்க்கிறார் என கவலை அடைந்ததாகவும்  ஆனால் தான் இங்கு பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.  இவ்வளவு பெரிய நிறுவனத்தில் பணி கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தனது பெற்றோர் மற்றும் உடன்  பணிபுரியும் நண்பர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பர்வீன் பாத்திமா மகிச்சியுடன் தெரிவித்தார்.


 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு