போலீசுடன் விளையாடலாம் வாங்க; வரும் சனி,ஞாயிறு, - நஞ்சப்பா பள்ளி மைதானம்

நமது திருப்பூரில் மாநகர காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் நல்ல புரிதலையும் நெருக்கத்தையும் உருவாகும் வகையில் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர்.  இந்நிகழ்ச்சி பற்றி அவர்கள் தெரிவிக்கையில் :-

 

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் வரும் 04.01.2020 சனி மற்றும் 05.01.2020. ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேநிலைப் பள்ளியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு  போட்டிகளை நடைபெற உள்ளது. 

 

இதில் ஓட்டப் பந்தயம், சாக்கு ஓட்டம், மியூசிகல் சேர் மற்றும் குழுவாக கலந்து கொள்ளும் கபடி, வாலிபால்  (ஆண்&பெண்) கோகோ (பெண்), கயிறு இழுத்தல் (ஆண் & பெண்) வழுக்கு மரம் ஏறுதல் (4 பேர் கொண்ட குழு) போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன.

 

இதில் பொதுமக்கள் தனியாகவோ தாங்கள் வசிக்கும் பகுதி அல்லது தாங்கள் பணி புரியும் நிறுவனம் அல்லது லயன்ஸ் ரோட்டரி சங்கம் அரசு துறைகள் சார்பில் குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஞாயிறு மாலை நடைபெறும் பிரமாண்ட கலை விழாவில் காவல் ஆணையர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

 

மேலும் அதே விழாவில் திருப்பூர் மாநகர காவல் துறையின் பணிகள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். இந்த நிகழ்வில் மட்டுமன்றி இனி திருப்பூரின் நலன் காக்க காவல் துறையோடு இணைந்து செயல்பட ஒரு இனிய துவக்கமாக அமையும்.  அனைவரும் திரண்டு வாரீர் என அழைக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க 9498126000, 9443381155. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image