பிரண்ட்லைன் பள்ளிகளின் முப்பெரும் விழா கோலாகல கொண்டாட்டம்

பிரண்ட்லைன் பள்ளிகளின் ஆண்டுவிழா டிசம்பர் 27இ28இ29 ஆகிய மூன்று நாட்கள் கோலாகமாக முப்பெரும் விழாவாக நடைபெற்றது.



முதல் நாள் பிரண்ட்லைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் ஆண்டுவிழா கற்பனை உலகத்தை அடிப்படையாகக் கொண்டும் இரண்டாம் நாள் பிரண்ட்லைன் மெட்ரிக் பள்ளியின் ஆண்டுவிழா தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையிலும் மூன்றாம் நாள் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியின் ஆண்டுவிழா பன்னாட்டு திருவிழாக்கள் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டும் நடைபெற்றது. பிரண்ட்லைன் மெட்ரிக் பள்ளியின் ஆண்டுவிழாவில் விஜய்டிவி சூப்பர் சிங்கர் புகழ் ஷியாம் விஷால் மற்றும் நீயா?நானா? புகழ் மனோன்மணி ஆகியோர் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.



ஷியாம் விஷால் மாணவர்களுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியும் மனோன்மணி வார்த்தைகளை தலைகீழாக பேசியும் பார்வையாளர்களை கவர்ந்தனர். மூன்று நாட்களும் மூன்று பள்ளிகளின் கருத்திற்கேற்ப பல்வேறு நடனங்களும் நாட்டியங்களும் நாடகங்களும் நடைபெற்றன. இதில் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் போன்ற தமிழ் கலாச்சாரத்தை வலியுறுத்தும் நடனங்களும் இராஜ இராஜ சோழன் நாடகமும் அனைவரையும் கவர்ந்தது. இந்த முப்பெரும் விழாவில் கடந்த ஆண்டு 100நாட்கள்  வருகை புரிந்த மாணவர்களுக்கும் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் சிறந்த ஆசிரியர் களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி செயலாளர் டாக்டர்.சிவகாமி பள்ளியின் இயக்குநர் சக்திநந்தன் மற்றும் துணைச் செயலாளர் வைஷ்ணவி நந்தன் பங்கேற்று விழாவை மிகச் சிறப்புடன் முன்னின்று நடத்தினர். முப்பள்ளியின் பெற்றோர்களும் மிகுந்த ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image