அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் வடக்கு எம்.எல்.ஏ விஜயகுமார் தீர்த்தக்குடத்துடன் நடனம் ஆடியதை பார்த்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நடந்த தீர்த்தக்குடம் ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் உள்பட திரளானவர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.
அப்போது ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ கே.என். விஜயகுமார் தீர்த்த குடத்தை தலையில் வைத்து கைகளில் வேப்பிலையை எடுத்துக் கொண்டு ரோட்டில் உற்சாகமாக நடனமாடினார்.
அந்த பகுதியின் மொடா மேளத்துக்கு ஏற்ப எம்.எல்.ஏ. ஆடியதை பொது மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். தனது சொந்த ஊர் கோவில் விசேஷத்திற்காக எம்எல்ஏ ஒருவர் தீர்த்தக்குடம் எடுத்து நடனம் ஆடியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.