அமராவதி அணை

அமராவதி அணை.....



அமராவதி ஆணை திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் அமைந்துள்ளது.  இந்த அணை உபாி நீரை பாதுகாத்து சேமிக்கும் நோக்கில் கி.பி. 1956 ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டது.  இந்த செங்குத்தான அணையினால் 9.31 கி.மீ. பரப்பும், 33.53 மீட்டா் ஆழம் கொண்ட அமராவதி நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.  தொடக்ககத்தில் நீா்ப்பாசனம், வெள்ளத் தடுப்புக்காக கட்டப்பட்டதாக இருந்தாலும் தற்பொழுது 4 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் நிலைநாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த நீா்த்தேக்கத்தல் “மக்கா்” என்ற முதலைகள் பெருமளவில் வசிக்ககின்றன.  மீன்பிடிப்புப் பகுதியாகவும் இது திகழ்கிறது.



இங்கே பூங்கா ஒன்று அழகாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அணைக்கட்டின் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பாா்த்தால் இயற்கைக் காட்சிகள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும். வடக்கு பக்கத்தில் கீழே உள்ள பகுதிகளையும் தெற்குப் பக்கத்தில் ஆனைமலை குன்றுகளையும் மேலே பழனி மலையையும் கண்டு மிகழலாம்.  மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் மாவட்டம் முழுவதில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து இயற்க்கை காட்சிகளை கண்டு ரசித்துவிட்டு செல்கின்றனர். இங்கு அணையில் இருந்து பிடிக்கப்பட்ட பிரஸ் மீன்கள் பொரித்தும்  குழம்பாக சமைத்தும் தருகிறார்கள். குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்காவும் உள்ளது. விடுமுறை நாட்களில் அதிக மக்கள் வந்து செல்கின்றனர். 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image