கடந்த 2019ம் ஆண்டில் டாப் ட்ரெண்டிங்கில் வைரலான விஷயங்களில் உலக அளவில் பேசப் பட்டது நம்ம நெசமணி தான். இது எப்படி டிரென்ட்டானது தெரியுமா. அது குறித்து ஒரு பிளாஷ் பேக் இதோ:-
ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில் சுத்தியல் ஒன்றின் படத்தினை பதிவு செய்து இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர் "இதன் பெயர் சுத்தியல்.இது விழுந்தால் டங், டங் என சத்தம் கேட்கும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரை தொடர்ந்து மற்றவர்கள் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' , Neasamani எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. இந்த டிரென்டிங்கை அடுத்து பிரென்ட்ஸ் 2-ஆம் பாகம் எடுக்கும் பேச்சுகளும் அடிப்பட்டது.
இதை பற்றி வடிவேல் தெரிவிக்கையில் எப்படி இந்த காமெடி இவ்ளோ நாள் கழிச்சி பாப்புலர் ஆனது என்று தெரியவில்லை. பல நண்பர்கள் போன் செய்து என்னிடம் விசாரிக்கின்றனர். எது எப்படியோ மக்கள் மனதில் இந்த அளவிற்கு என்மீது அன்பு இருக்கிறது என்று இந்த சம்பவம் மூலமாக புரிந்துகொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.