திருப்பூரில் 20 லட்சம் மதிப்புடைய 51 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது.
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து கடந்த 2 மாதங்களில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த வாரம் கோவையில் முத்தையா என்பவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து தமிழ்ச்செல்வி தேடிவந்தனர் இந்நிலையில் ஊத்துக்குளி சாலை அணைக்காடு பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரை நிறுத்தி சோதனை செய்தனர் அவர்கள் கொண்டு வந்திருந்த இரண்டு மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் 51 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது இதனையடுத்து அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாயி (32), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (43), திருச்சி சேர்ந்த ரோசிலின் (22) என்பதும் இவர்கள் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் விஸ்வநாதன் காம்பௌன்ட்ல் குடியிருந்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தாரகிரிமலை என்ற இடத்திலிருந்து ரயில் மூலமாக கஞ்சாவினை திருப்பூர் கொண்டு வந்ததாகவும் இதனை சிறிய சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய முயன்றதாகவும் ஒப்புக்கொண்டனர். ஏன் எடுத்து இவர்களை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.