நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பின்னர்  இனிமையான சந்திப்பு





 

நம்ம  திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு பின்னர்  முன்னாள் மாணவர்கள்  சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 


 

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2000 வது ஆண்டில் பிளஸ்2  முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, நிகழ்ச்சி நடைபெற்றது.  1998 முதல் 2000 ம் ஆண்டு வரை 11 மற்றும்  12 ம் வகுப்புகளில் 'பி' பிரிவில் படித்த மாணவர்கள் சந்தித்து தங்களது பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

 


 

20 ஆண்டுகளில் தங்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி பகிந்து கொண்டனர். தொடர்ந்து  முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கடிகாரம் மற்றும் மின்விசிறி  வழங்கப்பட்டது. இதை பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றுக்கொண்டார்.

 


 

இந்த நிகழ்வில் 'ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் பள்ளியில் சந்தித்து  பள்ளி வளர்ச்சிக்கு உதவுவது, 2000 ஆண்டில் பிளஸ் 2 முடித்து விட்டு கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு உதவுவது, ஆண்டுக்கொரு முறை ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பிரதாப், மோகனசுந்தரம், தன்ராசு, உள்ளிட்டோர் செய்து இருந்தனர். 




 


 



 



Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு