திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு 2020 விபரங்கள்





திருப்பூரில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்கு எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டு 13 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

 

வாக்குச்சீட்டு முறை யில் நடைபெற்ற இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் 17 மாவட்ட கவுன்சிலர், 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 265 கிராம ஊராட்சித் தலைவர், 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கு வெவ்வேறு நிறம் கொண்ட வாக்குச்சீட்டு களின் மூலம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

 

சமீப கால கட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளிவந்தன ஆனால் பழைய முறையான வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றதால் அவற்றை தரம் பிரித்து வாக்குகளை எண்ணும் பணி நேரம் பிடித்ததாக அமைந்தது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  அடுத்த நாள் காலை வரையிலும் நடைபெற்றது. 

 

இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் என்ற இரண்டு பதவிகளுக்கு மட்டுமே கட்சி சார்பில் போட்டியிடப்பட்டது. மற்ற இரண்டு பதவிகளுக்கும் சுயேட்சை சின்னங்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதால் இந்த இரண்டு பதவிகளை பிடிப்பதில் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து மாறி மாறி முன்னனி நிலவரங்கள் வெளிவந்த நிலையில் இறுதியாக 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 13 இடங்களை அதிமுக கைப்பற்றியது. இதில் திமுக மூன்று இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றின.

அதேபோல ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 170 இடங்களில் அதிமுக கூட்டணி 64 இடங்களை கைப்பற்றியது. இதில் திமுக கூட்டணி 88 இடங்களை கைப்பற்றியது. மீதமிருந்த 18 இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர்.


 

 

 


 



Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image