கொள்ளு ரசம் செய்வது எப்படி


தேவையானவை: 


கொள்ளு – அரை கப்புக்கும் கொஞ்சம் குறைவாக,


தனியா, சீரகம் – தலா 3 டீஸ்பூன்,


காய்ந்த மிளகாய் – 3,


மிளகு – அரை டீஸ்பூன்,


நறுக்கிய சாம்பார் வெங்காயம் – கால் கப்,


புளிக்கரைசல் – கால் கப்,


நெய், கறிவேப்பிலை, கடுகு, சீரகம் – தாளிக்க தேவையான அளவு,


கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய்,


உப்பு – தேவையான அளவு.


செய்முறை: 


கொள்ளைக் கழுவி, 4 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் (குக்கரில் 6 (அ) 7 விசில் விடலாம்).


கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, சாம்பார் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும் ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வேக வைத்த கொள்ளு கால் கப் சேர்த்து நைஸாக அரைக்கவும்.


இதனுடன் வேக வைத்த கொள்ளு ஒரு டேபிள்டீஸ்பூன் சேர்க்கவும்.


பிறகு புளிக்கரைசல் விட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கி, கொத்தமல்லி சேர்க்கவும்.


நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். 


சாதத்திலும் சாப்பிடலாம். அப்படியே சூப் மாதிரி குடிக்கவும் கொடுக்கலாம்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image