திருப்பூரில் 2019 ம் ஆண்டின் குற்ற வழக்குகள் பற்றி போலீஸ் எஸ்.பி., திஷா மிட்டல் கூறியது:-
நேற்றுடன் நிறைவு பெற்ற 2019ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் சொத்து வழக்குகளில் 234 குற்ற வழக்குகளில், 200 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில், ஆதாயக்கொலை,கூட்டுக்கொள்ளை பிரிவில் தலா இரண்டு. 47 நகை பறிப்பு வழக்கு கண்டுபிடிக்கப்பட்டு 11 வழக்கில், குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். மேலும், 45, கன்னக்களவு, 85, திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒரு கோடியே 20 லட்சத்து 18 ஆயிரத்து 630 ரூபாய் (472.5 சவரன் நகை, 28 வாகனங்கள்) மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பல்வேறு வழக்கு தொடர்பாக 519 பிடிவாரண்ட் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற வழக்கில், 965 பேர் தண்டனை பெற்றுள்ளனர். 29 கொலை வழக்கு, 14 கொலை முயற்சிமற்றும், 372 காயம் ஏற்படுத்துதல் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட, 348 வழக்கில், 283 வழக்குக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 41 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 16 வழக்கில், குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். 48 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது.வாகன விபத்து வழக்கில், 337 இறப்பு வழக்கு, 1,637 காய வழக்கு பதிவாகியுள்ளது.
வாகன விபத்தில், முந்தைய ஆண்டு, 497 பேர் இறந்தனர்; விபத்து குறைக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிரிழப்பு குறைந்துள்ளது.'ஹெல்மெட்' அணியாமல் டூவீலர் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 2 லட்சத்து 78 ஆயிரத்து 532 மோட்டார் வாகனவழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 860 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இ-சலான் மூலம், 60 ஆயிரத்து 666 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 69 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியது உட்பட பிற தவறுகளுக்கு, 9,981 பேர் டிரைவிங்லைசென்ஸ் ரத்து மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 35 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு, 224 பேக்கரி பதிவேடு துவங்கப்பட்டு, போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.