ராம்ராஜ் காட்டனின் வேட்டி வார கொண்டாட்டம்

ராம்ராஜ் காட்டனின் வேட்டி வார கொண்டாட்டம்




திருப்பூர் ராம்ராஜ் காட்டன் சார்பில்2020ம் ஆண்டின் வேட்டி வாரத்தை முன்னிட்டு புதியதாக ஒட்டிக்கோ கட்டிக்கோ அட்ஜஸ்டபிள் வேட்டி மற்றும் மேட்சிங் சட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது;



ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரையில் வேட்டிவாரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புதியதாக தயாரிக்கப்பட்ட வேட்டி, சட்டைகளை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தி வருகிறது.  இதன்படி 4 ஆவது ஆண்டாக வேட்டி வாரத்தை முன்னிட்டு ஒட்டிக்கோ கட்டிக்கோ அட்ஜஸ்டபிள் வேட்டி மற்றும் சட்டைகளை அறிமுகப் படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வேட்டியின் பார்டருக்கு ஏற்ற வண்ணங்களில் கலர் சட்டைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தன.இந்த நிலையில், நிகழாண்டு பாக்கெட்டுடன் கூடிய அட்ஜஸ்டபிள் வேட்டி, பார்டரின் கலருக்கு சட்டைகளும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.



இதற்கு முன்பாக இதே போன்ற அட்ஜஸ்டபிள் வேட்டிகள் விற்பனை செய்யப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவை மட்டும் கேட்டு வாங்க முடியும். உதாரணமாக இடுப்பு அளவு 28 என்றால் அதே அளவை கடைகளில் சொல்லி அதற்குத் தகுந்த வேட்டியை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அட்ஜஸ்டபிள் வேட்டிகளில் இடுப்பு அளவு 26 முதல் 38 அளவு வரையில் யார் வேண்டுமானலும் இதே வேட்டியை அணிந்து கொள்ள முடியும். அதற்குத் தகுந்தாற்போல் அளவு வைத்து தயாரிக்கப் பட்டுள்ளது.  இதன் மூலமாக தந்தையும், மகனும் ஒரே வேட்டியை மாற்றி மாற்றிக் கட்டிக் கொள்ளலாம். மேலும், வேட்டியின் பார்டருக்கு மேட்சாக அதே கலரில் சட்டைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதிலும் உள்ள ராம்ராஜ் ஷோரூம் மற்றும் முன்னணி கடைகளில் கிடைக்கும் இந்த வேட்டி-சட்டையின் விலை ரூ.1,000 ஆகும். இவ்வாறு தெரிவித்தார்.


 

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு