குன்னத்தூரில் மாணவியை கட்டிப்பிடித்த மனநலம் பாதித்த இளைஞர்


திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த சண்முகம், சம்பூர்ணம் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் வெங்கடாசலம் என்பவரை தத்து எடுத்தனர். அவரை டிப்ளமோ வரை படிக்க வைத்தனர். இந்நிலையில் சண்முகம், சம்பூர்ணம் ஆகியோர் அடுத்தடுத்து இறந்து விட்டனர். 20 வயதான வெங்கடாசலம் மீண்டும் தனிமையானார்.


சிறிது நாட்களாக அருகில் இருந்தவர்கள் உணவு கொடுத்தனர். அப்போது அங்கிருந்த இளம்பெண்களை வெங்கடாசலம் கட்டிப் பிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அருகில் தங்க அனுமதிக்கவில்லை. இதனையடுத்து வெங்கடாசலம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கினார்.


2 வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவர்களிடம் தினமும் ரூ.50 வாங்கி சாப்பிட்டு கண்ட இடங்களில் படுத்து தூங்கினார். இந்நிலையில் அந்த பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணை கட்டிப்பிடித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில் நேற்று மாலை பள்ளி மாணவிகள் வீடு திரும்பியபோது ஒரு மாணவியை கட்டிப்பிடித்து சில்மி‌ஷம் செய்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் குன்னத்தூர் போலீசார் வெங்கடாசலத்தை மீட்டனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சம்பங்கி கூறும்போது, படிக்கும் காலத்தில் ஏற்பட்ட கெட்ட சகவாசத்தால் வெங்கடாசலம் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளார். அவரை கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்பைடைக்க உள்ளோம் என்றனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image