தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்,
மைதா – 3 டீஸ்பூன்,
நல் லெண்ணெய் – தேவையான அளவு,
நெய் – தேவையான அளவு,
வாழைப் பழம் – ஒன்று.
பூரணத்துக்கு: தேங்காய் துருவல் – 2 கப்,
பொடித்த வெல்லம் – அரை கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.
செய்முறை:
கோதுமை மாவு, மைதாவுடன் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து, சப்பாத்தி மாவைவிட தளர்வாக பிசையவும்.
பிறகு அதன் மேல் கால் கப் நல்லெண்ணெய் விட்டு 3 மணி நேரம் மூடி வைக்கவும்.
தேங் காய் துருவல், ஏலக்காய்த்தூளை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும்.
பிறகு, பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கவும். இதனை அப்படியே கடாயில் போட்டு, இதில் உள்ள நீர் சுண்டும் வரை வறுக்கவும்.
ஆறியவுடன் உருண்டை களாக உருட்டவும்.
மேல் மாவு சிறிது எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து கைகளால் பரவலாக தட்டி, அதில் பூரண உருண்டை வைத்து மூடி, அப்படியே தோசை வடிவத்தில் போளியாக தட்ட வும்.
சூடான தோசைக்கல்லில் போளி யைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசைத்திருப்பியால் எடுத்து நெய் விட்டு சூடாகப் பரிமாறவும்.
மாலை நேர சுவையான சிற்றுண்டி.