இளவட்டகல்லை பந்தாடிய மாணவர்கள், பொங்கல் வைத்து கும்மியடித்து மாணவிகள்
பொங்கல் பண்டிகை என்றாலே எல்லோருக்கும் மனசுல ஒரு உற்சாகம் பொங்கும். அதுவும் கல்லூரி மாணவர்களுக்கு சொல்லவே வேண்டாம். என்ன தான் வீட்டில் குடும்பத்துடன் கொண்டாடினாலும் கல்லூரியில் உடன் படிக்கும் நண்பர்களோடு கொண்டாடுவது ஒரு ஆனந்தமான வரலாற்று நிகழ்வுதான். 

 


 

திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லுரியில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. வண்ண காகிதங்கள் மாவிலைத் தோரணங்கள் என்று திருவிழா கலைக் கட்டியது. கரும்பு நட்டு வைத்து வாழை இலையில் பழவகைகள்  வைத்து படையில் வைத்திருந்தனர். மாணவிகள் புடவையிலும், மாணவர்கள் வேட்டி சட்டையிலும் கலக்கலாக வந்திருந்தனர்.

 


 

ஒரு புறம் மாணவிகள் பொங்கல் வைத்து குலவை சத்தம் போடா, இன்னொரு புறம் மாணவர்கள் இளவட்ட கல்லை தூக்க, சிலம்பாட்டம், மேளம் அடிப்பதற்கு ஏற்ப மாணவர்களின் நடனம் என்று கல்லூரி வளாகம் எங்கும் உற்சாகமாக காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் செயலாளர் டி.ஆர்.கார்த்திக் தலைமை தங்கி சிறப்பித்தார். நிர்வாக அதிகாரி முனைவர் எம்.ராஜாமணி சிறப்புரையாற்றினார்.

 



 

இவ்விழாவில் சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், வடை கடித்தால், கயிறு இழுத்தல் ரங்கோலி. பொங்கல் வைத்தால், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் மெதுவாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், பாட்டு போட்டி, நடன போட்டி, கட்டுரை போட்டி போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டது. அணைத்து போட்டிகளில் மாணவ மாணவியர் உற்சாகமாக கலந்துகொண்டனர். இதில் வெற்றி  பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லுரியின் செயலாளர் பரிசுகளை வழங்கினார்.  

 


 

மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்வை பற்றி மாணவர்கள் கூறும் பொழுது. நாங்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவது மகிச்சியாக உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் எங்களுக்கு தெரியாத கலாச்சார விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்று தெரிவித்தனர்.  

 


 

நிகழ்ச்சி ஏற்படுகளை முனைவர் ஜி.ஜோதி செய்திருந்தார். நாட்டுப்பனுடன் விழா நிறைவு பெற்றது.  


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image