பல்லடம் அடுத்த, இலவந்தி ஊராட்சி, கெருடமுத்துாரை சேர்ந்த தங்கராஜ் மகன் நந்தகுமார், 25; கூலித் தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் சுதாகர், 25. நண்பர்களான இவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். இதில், நந்தகுமார் இறந்தார்.காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், சுதாகரை பிடித்து விசாரித்து வருகிறோம். சுதாகர் தாக்கியதில் நந்தகுமார் இறந்தாரா, தாக்கப்பட்டதற்கு என்ன காரணம், வேறு காரணத்தால் இறந்தாரா ஆகிய கோணங்களில் விசாரணை நடக்கிறது என்றனர்.