தர்பார் பனியனுக்கு தனி மவுசு


திருப்பூரில் பனியன் வர்த்தகம் பண்டிகை மற்றும் சீசன் கால அடிப்படையில் தான் அதிகமாக நடை பெற்று வருகிறது. இதற்கு தகுந்தாற் போல் தொழில் துறையினர் தங்களுக்கு கிடைக்கிற ஆர்டர்களின்படி ஆடைகளை தயாரித்து அனுப்பு வருகிறார்கள்.


மேலும், அவ்வப்போது வருகிற குறுகிய கால சீசன்களின்படியும், கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் மற்றும் பிரபல நடிகர்களின் திரைப்படம் போன்றவை வெளிவரும் போது, அது தொடர்பான ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தில் ரஜினிகாந்தின் ஒரு சில புகைப்படங்களை கொண்டு ஆடை தயாரிப்பாளர்கள் டிசர்டுகள் தயார் செய்து வருகிறார்கள். இந்த டி-சர்ட் விற்பனையும் அதிகமாக நடந்து வருகிறது.

இது குறித்து ஆடை விற்பனையாளர் கூறியதாவது:-
தர்பார் திரைப்பட டிரெய்லர் வெளியானதும் அதற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக இது தொடர்பாக ஆடைகளை தயாரித்தால், அதிகளவு விற்பனை நடைபெறும் என்ற எண்ணத்தில் தர்பார் பட டிரெய்லரில் ரஜினிகாந்த் வருகிற சில காட்சிகளை வைத்து டி-சர்ட்டுகளை தயாரித்தோம்.

இந்த டி-சர்ட்டுகள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை, வேலூர், கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு டி-சர்ட்டுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. விற்பனை அதிகமாக இருப்பதால், மீண்டும் ஆர்டர்கள் கொடுக்கிறார்கள். இன்று படம் வெளியாகி உள்ள நிலையில் ஆர்டர்களின்படி டி-சர்ட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு தெரிவித்தார். 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image