திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் விஜய கார்த்திகேயன் தேசியகொடியை ஏற்றி வைத்தார். விழாவில் 93 லட்சம் மதிப்பிலான நல்ல உதவிகள் வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தினவிழாவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் 515 பேருக்கு, 93.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது. மாவட்ட காவல் துறை காவலர்களுக்கு 39 பேருக்கும், மாநகர காவலதுறை யினர் 16 பேர் என 55 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது. 239 பேருக்கு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் எஸ். பி., திஷா மித்தல், மாநகர கமிஷனர் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு. மேலும் மாணவர்கள் பொது மக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு காலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தார்.