அரியலுாரை சேர்ந்தவர் பால்ராஜ், 40. இவரது மனைவி மஞ்சுளா, 36; இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, திருப்பூர் பல்லடம் ரோடு, பாரதி நகரில் தங்கி, கட்டட வேலைக்கு, தம்பதி சென்று வருகின்றனர்.நேற்றுமுன்தினம், தம்பதி தீயில் கருகியவாறு, அலறிக்கொண்டிருந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீரபாண்டி போலீசார் நடத்திய விசாரணையில், 'மஞ்சுளா கால் வலி காரணமாக வேலைக்கு செல்லவில்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பால்ராஜ், வேலைக்கு செல்லாதது குறித்து, மஞ்சுளாவிடம் கேட்டார். தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டது. இதில், மஞ்சுளாவை, பால்ராஜ் அடித்துள்ளார். பிரச்னை பெரிதாகவே, பால்ராஜ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு, பின் மனைவி மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார்' என்று தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.