திருப்பூரில் உள்ள அருள்மிகு வீரராகவ பெருமாள்திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ராஜ அலங்காரத்தில் கருட வாகனத்தில் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி ஆழ்வார்களுக்கும்,பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். பக்தர்களுக்கு 1-லட்சம் லட்டுகள் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பூரில் உள்ள புகழ் பெற்ற அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கிபகல்பத்து உற்சவம்நடைபெற்றுவருகிறது, முக்கிய நாளான மார்கழிமாதவளர்பிறை ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது, இந்த விழாவில் அதிகாலை 3-மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம்நடைபெற்றது,தொடர்ந்து வீரராகவ பெருமாள் ராஜஅலங்காரத்தில் கருட வாகனத்தில் பரமபத வாசலானவடக்கு நுழைவாயில் வழியாக எழுந்தருளி ஆழ்வார்களுக்கும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும்காட்சி அளித்தார், பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமிதரிசனம் செய்தனர், அதனை தொடர்ந்து சாமிதரிசனம் செய்த அனைத்து பக்தர்களுக்கும் 1-லட்சம் லட்டுகள் பிரச்சாதம் வழங்கப்பட்டது.