எலுமிச்சம்பழ தோலில் இவ்வளவு விஷயம் இருக்கா


இந்த உலகத்துல அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய சிறந்த பழம் எலுமிச்சை பழம். எலுமிச்சை சாற்றில் உள்ள சத்துக்களை விட, எலுமிச்சை தோலில் வைட்டமின் சி மற்றும் ஏ, கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.



இந்த எலுமிச்சை தோல் சருமத்திற்கு நல்ல பிளிச்சிங் தன்மையை கொடுக்கும். எலுமிச்சை தோலை வெயிலில் நன்கு காயவைத்து பொடி செய்து அந்த பொடியுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் என்ற அளவில் கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதுபோல் வாரம் ஒரு முறை செய்து வர சருமம் பொலிவுடன் காணப்படும். குறிப்பாக சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் கருமைகளும் மறைந்துவிடும்.



நகம் மஞ்சள் நிறமாக இருந்தால், அவர்கள் நகங்களை 10 நிமிடங்கள் வெது வெதுப்பான நீரில் ஊற வைத்த பின்பு எலுமிச்சை தோலால், நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்த கழுவ வேண்டும். இவ்வாறு 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும். இதே போல் பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மறையும்.



உடல் எடையை நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள். இவ்வாறு செய்வதினால் உடல் எடை நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.



சிலருக்கு முகத்தில் அடிக்கடி முகப்பருக்கள் தோன்றும். வராமல் தடுக்க எலுமிச்சை தோல் மிகவும் உதவுகிறது. இரண்டு எலுமிச்சை பழத்தின் தோலை எடுத்து அவற்றை மிக்சி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரைத்த எலுமிச்சை தோலை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் நன்றாக தடவ வேண்டும். பிறகு மசாஜ் செய்யுங்கள், மசாஜ் செய்த பிறகு 2 மணி நேரம் வரை காத்திருக்கவும், பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகப்பருக்கள் மறையும். மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.


 


கரும்புள்ளிகள் மறைய வெயிலில் காயவைத்து பொடி செய்த எலுமிச்சை பொடியில் ரோஸ் வாட்டர், தயிர், ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவலாம். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image