தேவையான பொருட்கள் :
இட்லி புழுங்கல் அரிசி – 6 கப்,
துவரம்பருப்பு – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 8,
தனியா – 2 டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு,
நறுக்கிய சாம்பார் வெங்காயம் – 3 கப்,
நறுக்கிய கொத்தமல்லித் தழை – கால் கப்,
கறிவேப்பிலை,
எண்ணெய் – பொரிக்க தேவை யான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் நன்றாக கழுவி, ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நீரை வடித்து அதனுடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும்.
ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு 2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும் மாவு ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் ரொம்ப இளக்கமாகவும் இல்லாமல் அரைக்கவும்.
கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.
சூடாக பரிமாறலாம். தேங்காய் சட்னி, புதினா சட்னி. பட்டாணி குருமா தொட்டுக் கொள்ள கொடுத்தால் மேலும் சுவை கூடும்.