இதுவரை கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ் தெரிவிக்கையில்:-
கொரோனோ வைரஸ் பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்கள், சீன வழியாக வேறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர உடற்பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கான பிரத்யேக டீம் விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் கோவை, திருச்சி போன்ற மற்ற பெருநகரங்களிலும் கொரோனோ அறிகுறி தொடர்பாக தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் முறை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் சென்னை துறைமுகத்திலும் சுகாதாரத்துறை சார்பாக பரிசோதனை செய்யப்படுகிறது. ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பின் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையை தொடங்க அனைத்து வசதிகளும் செய்யப் பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் 3 பேர் தமிழகத்திற்கு வந்து, கொரோனோ வைரஸை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்து சென்றுள்ளனர்.
கொரோனோ வைரஸ் பற்றி யாரும் பயப்பட வேண்டாம் - பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்