மலைக்கோவில், ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர்த் திருவிழாவில், இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.மங்கலம் அடுத்த, மலைக்கோவில் ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை மற்றும் மாலை, சுவாமி கிரிவலம் நிகழ்ச்சியும், 6ம் தேதி, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று மாலை, 6:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. தொடர்ந்து, இரவில், யானை வாகனத்தில் சென்று அருள்பாலித்தனர்.இன்று காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவிநாயகர் தனித்தேரிலும், ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில், வள்ளி தெய்வானையுடன், ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை, 3:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் மற்றும் கிரிவலமாக செல்லும் தேரோட்டம் நடைபெற்றது. நாளை, பரிவேட்டை, குதிரை வாகன பவனியும், 10ம் தேதி மகா தரிசனமும், 11ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது.