குடீஸ்களுக்கு பிடித்த குடைமிளகாய் பன்னீர் தோசை. 

குடீஸ்களுக்கு பிடித்த குடைமிளகாய் பன்னீர் தோசை.



தேவையான பொருட்கள் :


தோசை மாவு - 2 கப்


மஞ்சள் குடைமிளகாய் - 2
பச்சை குடைமிளகாய் - 2
சிவப்பு குடைமிளகாய் - 2
பச்சைப் பட்டாணி - 1 கப்
துருவிய பன்னீர் - கால் கப்
பெ.வெங்காயம் - 4
கொத்தமல்லி - சிறிதளவு தழை


எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, வேக வைத்த பட்டாணி சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை மாவை சற்று கனமாக ஊற்றவும்.

அதன் மீது குடைமிளகாய் வகைகள், வெங்காயம், கொத்தமல்லி தழை, பன்னீர் துருவர் ஆகியவற்றை பரவலாக தூவவும். தோசையை சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு பக்கம் நன்றாக வெந்தாலே போதுமானது. அதை அப்படியே எடுத்து பரிமாறலாம். சூப்பரான குடைமிளகாய் பன்னீர் தோசை ரெடி. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒருமுறை செய்து பாருங்கள். 
 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image