திருப்பூா் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் மாா்ச் 1 ஆம் தேதி உடுமலையில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கிருஷ்ணசக்கரவா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூா் பிரிவு சாா்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் உடுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நேதாஜி மைதானத்தில் மாா்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஹாக்கி ஆண்கள் அணி மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.1,600, இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.800 பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.