விடைத்தாளில் ரூ.100 வைங்க போதும்''- பொதுத்தேர்வில் பாஸ் ஆக டிப்ஸ் கொடுத்த பள்ளி முதல்வர்:
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் எப்படியெல்லாம் ஏமாற்றி பாஸ் ஆகலாம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வரான ப்ரவீன் மால் என்பவர் பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட மாணவர்களுக்கு அடுக்கடுக்கான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அங்குள்ள மாணவர் ஒருவர் இதனை செல்போனில் படம்பிடித்து புகார் தெரிவிக்க இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.