ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், அதுவும் மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில்  16 கி.மீ தூரத்தில் உள்ள  மிக பழமை வாய்ந்த சிவாலயம்.



இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். கரண், தூஷணன் ஆகிய அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும், தங்களை பின்தொடர்வதை உணர்ந்தார். அந்த தோஷம் நீங்க சிவபூஜை செய்ய விரும்பினார்.



 இதற்காக, இங்கு 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தன் தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் "ராமலிங்கசுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் "அனுமந்தலிங்கம்' என்ற பெயரில் உள்ளது. பர்வதவர்த்தினிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது.



 கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான் தரிசிக்க முடியும். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், அதுவும் மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலமாக உள்ள. பழைமையான இத்தலத்திற்கு ஒருமுறையாவது சென்று வருவது சிறப்பு.


தகவல் -சிவனுக்கு இனியவன்


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image