உடுமலை; திருமணமான 16 நாளிலேயே புது பெண் தற்கொலை

திருமணமான 16 நாளிலேயே புது பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ள விளாமரத்துபட்டியை சேர்ந்த சண்முகவேலு, ஜீவரத்தினம் இவர்களின் மகன் ரகுபதி 32)வயது. அந்த பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 30-ந்தேதி ரகுபதிக்கும், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமியின் மகள் தீபா வயது 18 என்பவருக்கும் உடுமலையில் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதிகள் விளாமரத்துபட்டியில் வசித்து வந்தார். திடீரென ரகுபதி தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த தளி போலீசார் தீபாவின் உடலை கைப்பற்றி உடுமலை அரசு மருத்தவ மனையில் பிரேத பரிசோதனை முடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


இதை பற்றி தீபாவின் தந்தை ராமசாமி பேசுகையில், நான் இளநீர் வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தீபா. இவள் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். எனது மகளின் புகைப்படத்தை பார்த்து தான் ரகுபதி மற்றும் அவரது தாய் பெண் பார்க்க வந்தனர். அப்போது அவர்கள் இப்போதே திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்றனர். ஆனால் என்னிடம் தற்போது போதிய பணம் இல்லை என்றேன். அதற்கு அவர்கள் நீங்கள் பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறி, எனது பெண்ணுக்கு நகை மற்றும் திருமண செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டனர். திருமணத்திற்கு பின்பு தினமும் எனது மகள் எங்களுக்கு போன் செய்து நலம் விசாரிப்பாள். சம்பவத்தன்று மதியம் 1.30 மணியளவில் எங்களுக்கு போன் செய்தாள். ஆனால் திடீரென மாலை 3.30 மணியளவில் எனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து நான் எனது மனைவியுடன் அங்கு சென்றன். அப்போது வீட்டில் எனது மகள் தூக்கில் தொங்கிய படி கிடந்தாள். மேலும் அவளது கால் தரையில் தொட்டபடி இருந்தது. மேலும் எனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. எனவே எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தளி போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி நான் தெரிவித்ததற்கு மாறா முதல் அறிக்கையை பதிவு செய்தார். மேலும் எனது மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக தளி போலீசார் நடந்து கொள்கின்றனர். எனவே எனது மகள் இறப்புக்கான காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு தளி போலீசாருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றார். திருமணமாகி 16 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விசாரணை நடைபெற்று வருகிறது. ஆர்.டி.ஓ. தீபாவின் கணவர் ரகுபதியிடம் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு