பூலுவபட்டி பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் கலாதரன் இவருக்கு வயது 39. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப்பூர் பூலுவபட்டி பகுதிக்கு கூடிவந்து தாங்கினார். சமீபத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கலாதரனின் மனைவி குழந்தையுடன் கேரளாவுக்கு சென்று விட்டார்.
கலாதரன் மட்டும் திருப்பூரில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலாதரனை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கலாதரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.