புளியம்பாறை அரசு துவக்க பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ரஜினி மக்கள் மன்றம் மரபாலம் கிளை, நிலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஒய்ஸ்மென் கிளப் குன்னூர், ஷாலோம் சரிட்டபிள் டிரஸ்ட் ஆகியன சார்பில் நடைபெற்ற முகாமிற்கு ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் குமார், இணை செயலாளர் கே.கே துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.
உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவ குழுவினர் ராம்குமார் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 15 பேர் கண் புரை அறுவைக்கு தேர்வு செய்யப்பட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டனர்.
முகாமில் ஓய்ஸ் மென் கிளப் செயலாளர் தினேஷ், தீனதயாளன், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பாலு, பிஜூ, மதி, கண்ணதாசன், நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.