தூக்கத்தில் 20 பேர்களின் உயிரை பறித்த கொடூரம் - திருப்பூரில் பயங்கரம்

திருப்பூர் அவிநாசி அருகே இன்று அதிகாலை நடந்த கோர விபத்து. பெங்களுரூவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம்  நோக்கிச்  கேரள அரசு சொகுசு பஸ் இன்று அதிகாலை (வியாழக்கிழமை )  3 மணியளவில் அவிநாசி அருகே புறவழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்ஸில் 48 பயணிகள்  பயணம் செய்து கொண்டு இருந்தனர். இரவு பயணம் என்பதால் பஸ்ஸில் வந்த அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். 



அவிநாசி அருகே வந்து கொண்டிருந்த பொழுது சேலம் நோக்கி எதிர் திசையில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரை தாண்டி கேரளா நோக்கி சென்ற பேருந்தின் மீது மோதிபெரும் விபத்தை ஏற்படுத்தியது. 



பேருந்து ஓட்டுனர் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்துவிட்டது. இந்த விபத்தில் 19 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. அவிநாசி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் போராடி பஸ்  விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் உடனே சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். 



இந்த பேருந்தில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, கோபிகா, சர்ஷ்மா, பிரவீன், மாதேவ், தன்கஜன், தேவி துர்கா, சனோப், மனாசி மணிகண்டன், ஜோர்டின், அனு, அனுமேரி, பின்சி, ராப்ஹேல், பின்னு பாய்ஜூ, ஜோஸ்குட்டி, ஜாஸ்மின்,  ராசைட்,  அலன் சர்லஸ், மாலாவாட், நிபின்பேபி, டாமன்ஸிராபிரா,  கிரிஸ்டோ,
 திருச்சூரை சேர்ந்த நசீப் முகமத், அலன்சன்னி, ஜோபிபியூல்,ரோஸ்லி, சோனா, கிரண்குமார்,  ஹனிஷ், மதுசூதனவர்மா, அனு, யேசுதாஸ், ஜூசஸ்முகாண்டஸ், அஜய் சந்தோஸ், தாமஸ் டேவிட், ராமசந்திரன்,  மாரியப்பன், இக்னாட்டிஸ் தாமஸ், வினோத், அகில், ஸ்ரீலஷ்மிமேனன்,
பாலக்காட்டை சேர்ந்த சந்தோஸ்குமார், ராகேஷ்,  பிரதீஷ்குமார், சிவக்குமார்,
ஆகிய 48 பேர் பயணம் செய்துள்ளனர். மொத்தம் 11 பெண்கள், 37 ஆண்கள் பயணம் செய்தனர். பெரும்பாலனோர் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் வேலை புரிபவர்கள்.  இதில் 6 க்கு மேற்பட்ட பெண்கள் பலியாகி இருக்கலாம் என தெரியப்படுகிறது.  இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மீதமுள்ள  28 நபர்கள் கோவை மற்றும் திருப்பூர் 7 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். 



இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. கேரள மாநில இரண்டு அமைச்சர்கள், இரண்டு எம்பிகள், பாலக்காடு மாவட்ட கலெக்டர் ஆகியேர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதுவரை இரு உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image