மத்திய அரசு பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு பட்ஜெட்டை தொடர்ந்து இன்று காலை துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது விநியோக திட்டத்தை விரிவு படுத்த 400 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும். 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். நெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும். இதற்கான மானியங்கள் அளிக்கப்படும். திருத்திய நெல் சாகுபடி 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும்.
முன்னதாக டெல்டா மாவட்டங்களுக்கு நற்செய்தியாக, அப்பகுதி வேளாண் பாதுகாப்பு மையமாக அறிவிக்கப்பட்டது. வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது டெல்டாவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்பயா நிதி மூலம் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மகப்பேறு உதவி திட்டத்திற்கு 925 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் & மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 60 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று மதத்திலும் ஈடுப்பாடு கொண்ட மக்களை கவரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கீழடியில் தொல்பொருள் ஆய்வுக்கு ரூ 12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ64,208.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நகர்ப்புற திட்டத்தின் கீழ் 1.12 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. .