உடனே கல்யாணம் ஆகனுமா; பல ஆயிரம் ஜோடிகளை சேர்த்து வைத்த காதல் கடவுள்

இந்த கோவிலுக்குச் சென்றால் காதல் திருமணம் நிச்சயம். என்னங்க ஆச்சர்யமா இருக்கா. அப்படிதாங்க வரலாற்று கதை சொல்கிறது.



திருமணத்திற்கு வரன் தேடுவதே இன்றைய நிலையில் மிகவும் சிக்கலான வேலை. இதில் ஆண், பெண் என இருபாலார்க்கும் எதிர்பார்ப்புகள், ஆசைகள், கனவுகள் அதிகம். சிலருக்கு பெற்றோர் மூலம் எதிர்பார்ப்புகள் கைகூடிவிடும். காதலிப்பவர்களுக்கு பிரச்சினையே இல்லை. அல்லது அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. புதிதாக காதலிக்க இருப்பவர்கள் தான் பாவம். யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் துவங்கி, கிடைத்தால் போதும் என சோர்ந்துபோகும் நண்பர்கள் எல்லோர்க்கும் உண்டு. அப்படியானவர்களுக்குத்தான் அருள்பாலிக்கக் காத்திருக்கிறார் யுயே லாவோ (Yue Lao). தைவானில் இருக்கும் காதல் கோவிலின் மூலவர் யுயே லாவோ தான். இங்குவரும் பக்தர்களுக்கு காதல்வரம் கிடைப்பதாக காலங்காலமாக நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது.


யுயே லாவோ வின் வரலாறு


சீனாவின் டாங் வம்சம் ஆட்சியில் இருந்த காலம். அரசர் தனக்கு காதல் திருமணம் தான் நடக்கவேண்டும் என யுயேவை வேண்டிக் கொண்டதாக வரலாறில் ஓரிடம் வருகிறது. அதன்பின்னர் கிங் வம்சத்திலும் இதே கதை. இதே கடவுள். இதே வேண்டுதல். யுயே இருவருக்கும் காதல் வரத்தை அளித்திருக்கிறார். அன்று விஸ்வரூபமெடுத்த நம்பிக்கை இன்றுவரை வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒட்டுமொத்த ஆசியாவிலும் மக்கள் செல்ல விருப்பப்படும் கோவில்களில் இதுவும் ஒன்று. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 5000 ஜோடிகள் யுயேவின் அருளால் இணைந்தார்கள் என்று கோவிலின் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இங்கு வந்து காதலைப் பெற்றவர்கள் திருமணமானபின் இதே கோவிலுக்கு வந்து இனிப்புகளை வழங்குகிறார்கள்.


சிங்கிள் கடவுள்


1859 ஆம் ஆண்டிலேயே இந்தக்கோவில் கட்டப்பட்டு விட்டாலும் யுயேவின் சிலை 1971 ல் தான் நிறுவப்பட்டது. தைவான் மக்களால் ஆரம்பத்தில் காக்கும் கடவுளாகவே யுயே நம்பப் பட்டிருக்கிறார். விஷயமே தெரியாதா? என கிளம்பி வந்த வியட்னாம் மக்கள் தான் யுயே காதல் கடவுள் என்று வரலாற்றை எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. யுயே சிங்கிள் தான். ஆனால் தான் சிங்கிளாக இருந்தாலும் தன்னிடம் வருபவர்களுக்கு கம்மிட்டெட் ஆக வரம் அளிக்கும் அந்த மனசுதானே கடவுள்.....


 


தகவல் - ராகவன்


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு