திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மாணவர்கள் ரோலர்ஸ் கேட்டிங்கில் சிறந்த முறையில் விளையாடி பரிசுகளை பெற்றனர்.
மாவட்ட அளவிலான ரோலர்ஸ் கேட்டிங் போட்டி கோயம்புத்தூரில் உள்ள வ.உ.சி.மைதானத்தில் நடைபெற்றது. அதில் சுமார் 350 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அப்போட்டி வயது வாரியாக நடைப்பெற்றது. இதில் திருப்பூரைச் சேர்ந்த ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவ மாணவியர்கள் பிரியதர்ஷன் ரிங்1, ரிங்2, இரு போட்டிகளிலும் முதல்இடம், தருணிஷ் ரிங்1,இரண்டாம் இடம், ரத்தினவேல் ரிங்1,ரிங் 2,மூன்றாமிடம், நரேன் ரிங், இரண்டாம்இடம், சோட்டன்ராஜ் ரிங் 2, இரண்டாம் இடம், நகுல் ரிங்1, மூன்றாம் இடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் பெற்று சாதனை படைத்தனர்.தனி நபர் பிரிவில் பிரியதர்ஷன் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், இணை இயக்குனர் வைஷ்ணவி நந்தன், பள்ளி முதல்வர் துணை முதல்வர் மற்றும் பயிற்சியாளர் பாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.