நம்பி வந்த மாணவியை நாசம் செய்த 3 மாணவர்கள்; குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து சீரழித்த கொடுமை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் உள்ள அரசு மகளிர் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் பள்ளி முடித்து அந்த மாணவி வீட்டுக்குச் செல்வதற்காக கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வேப்பனஹள்ளி அடுத்த திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் வந்துள்ளார். இருவரும் ஏற்கெனவே படித்த பள்ளியில் நண்பர்கள் என்பதால், சாதாரணமாக அவரிடம் பேசிகொண்டிருந்துள்ளார். அப்போது மது போதையில் மாணவரின் நண்பர்களான ஜோடுகொத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மஞ்சுநாத் வந்துள்ளனர். இருவரும் மது கலந்து வைத்திருந்த குளிர்பானத்தை மாணவியிடம் சாதாரண குளிர்பானம் என கொடுத்து பருக வைத்துள்ளனர்.

பின்னர் லேசாக மயங்கிய அந்த சிறுமியை கார் ஒன்றில் வைத்து அருகில் உள்ள வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து மூன்று பேரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவர் மற்றும் இளைஞர்கள் ராஜா, மஞ்சுநாத் மீது வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து 11ஆம் வகுப்பு மாணவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ஏற்கெனவே திட்டமிட்டபடி, அந்த மாணவியை, 11-ம் வகுப்பு மாணவர் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, அவரது நண்பர்கள் எதார்த்தமாக வருவதுபோல் வந்து, மது கலந்த குளிர்பானத்தை அந்த மாணவிக்கு கொடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்ததும் மயக்கமடைந்த மாணவியை காரில் வைத்து நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, மூவரும் மாறிமாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து 11-ம் வகுப்பு மாணவரைக் கைது செய்த போலீசார் தலை மறைவாக உள்ள பட்டதாரி இளைஞர் உள்ளிட்ட 2 இளைஞர்களை தேடி வருகின்றனர். ஆட்கள் நிறைந்த கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில், சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image