மார்ச் 31-க்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க  வேண்டும் - மத்திய அரசு

ஆதாருடன் பான் என்னும் வருமான வரி கணக்கு நிரந்தர எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இது தொடர்பாக நிதி சட்டம் 2017, குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், அந்த பான் எண் செல்லாது என கூறுகிறது. ஆனால் இந்த விதியை மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாற்றி இருக்கிறது.




அதாவது, வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், அந்த பான் எண் செயலற்றதாகி விடும் என மத்திய அரசு மாற்றியது. தற்போது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதாருடன் இணைப்பதற்கு மார்ச் 31-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இதுவரை ஆதாருடன் இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து விட வேண்டும்.

அப்படி மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், அவர்களின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் செயலற்றதாக ஆக்கப்பட்டு விடும். இவ்வாறு செயலற்றதாக ஆக்கி விட்டால், அந்த வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை கொண்டு எந்தவொரு நிதி பரிமாற்றமும் செய்ய முடியாமல் போய் விடும்.


 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image