காரைக்குடி; தொழிலில்! மும்முரம் காட்டிய பெண்கள்
காரைக்குடியில் விலை உயர்ந்த துணிகளை திருடும் பெண்கள் - ஒரே கடையில் பல நாட்களாக கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

காரைக்குடியில் உள்ள துணிக்கடையில் விலை உயர்ந்த துணிகளை திருடும் 2 இளம்பெண்களை சிசிடிவி கேமரா கையும் களவுமாக காட்டிக் கொடுத்துள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள ஒரு துணிக்கடைக்கு 2 பெண்கள் வந்துள்ளனர். துணிகளை வாங்குவது போல நீண்ட நேரமாக சுற்றி வந்த அவர்கள் கடையில் இருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பி துணிகளை அபேஸ் செய்தனர். விலை உயர்ந்த புடவைகளை எல்லாம் பார்த்து, பார்த்து அவர்கள் தங்கள் பைகளில் எடுத்து வைத்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் கேமரா இருப்பதை பார்த்தும் கூட  திருடும் தொழிலில் கவனம் செலுத்தி அவர்கள் திருடும் காட்சிகளை கொண்டு 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு