சிஏஏ. என்.பி.ஆர், என்.சி.ஆர் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - உத்தவ் தாக்கரே. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கட்தொகை பதிவேடு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் முதன்மையான பிரச்சினைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறிய தாக்கரே, இவை குறித்த அச்சம் யாருக்கும் தேவையில்லை என்றும், ஒரு இந்திய குடிமகன் கூட இதனால் நாட்டைவிட்டு வெளியே தூக்கியெறியப்பட மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் உத்தவ் தாக்கரே மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச்சு நடத்தினார்