திருப்பூர் செட்டிபாளையம் புது பாலம் அருகிலுள்ள இரவு டிபன் கடை, வண்டி கடை தீயில் எரிந்தது.
திருப்பூர் வடக்கு திருமுருகன்பூண்டி ரீங் ரோடு செட்டிபாளையம் புதுப்பாலம் அருகிலுள்ள இரவு வண்டி கடை மற்றும் டிபன் கடைகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் இரவு டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத போது மர்ம நபர்கள் டிபன் கடைகளுக்கு தீயிட்டுள்ளனர். இதில் கடையை முழுவதும் எரிந்து சாம்பலாயின. மேலும் கடையிலிருந்து தோசை கல் மற்றும் புரோட்டா மேடைகளை உடைத்து கீழே தள்ளி விட்டு சென்றுள்ளனர். மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் செட்டிபாளையம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.