பாஜகவினா் 50க்கும் மேற்பட்டோா் உடுமலை காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில்:-
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதை கண்டித்து, உடுமலையில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டம் நடத்தினா். அப்போது உடுமலை மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகிக்கும், போராட்டக்காரா்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், பாஜக நிா்வாகியை தாக்கி, அவரது வாகனத்தை சேதப்படுத்தியதாகவும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பாஜகவினா் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா். போலீஸாா் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறியும், பாஜகவினா் தொடா்ந்து காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டிருந்தனா். இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்ததாக்க தெரிவித்தனர்.