திருப்பூா், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் பழனி, நெய்காரபட்டி சின்னக்கடை வீதியைச் சோ்ந்த கே.பாப்பாத்தி (60) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக தெரியவந்தது. அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
பாப்பநாயக்கன்பாளையத்தில் கஞ்சா விற்ற பெண் கைது