ஒரே தாய் - தந்தைக்கு பிறந்த 6 குழந்தைகள் மரணம் : கேரளாவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்த ரபீக்- சப்னா தம்பதிக்கு 2010ஆம் ஆண்டு திருமணமானது. இந்நிலையில், திருமணமாகி ஒன்பது ஆண்டுகளுக்கிடையே பிறந்த, 3 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என 6 குழுந்தைகள் மரணமடைந்துள்ளன.
நான்கரை வயது சிறுமி தவிர, ஏனைய ஐந்து குழந்தைகளும் பிறந்து ஓராண்டுக்குள் மரணமடைந்துள்ளன. ஆறாவது பிறந்த குழந்தை, 93வது நாளில் மரணமடைந்தது. தொடர்ந்து குழந்தைகள் மரணமடையும் சம்பவங்களுக்குள் ஏதேனும் மர்மம் உள்ளதா என போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், குழந்தைகளின் மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த குழந்தையின் உடற்கூறு ஆய்வு அறிக்கையிலும், குழந்தை இயற்கையாக மரணமடைந்ததாகவே மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்