காங்கயத்தில் ஒன்றியப் பகுதியில் உள்ள பள்ளிகளில் துப்புரவுப் பணி செய்யும் தற்காலிகப் பணியாளா்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கபடவில்லை. இதனால் அன்றாடச் செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாக சொல்கிறார்கள். காங்கயம் ஒன்றியப் பகுதியில் மொத்தம் 56 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 3,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் சாா்பில், தற்காலிகப் பணியாளா்கள் நியமிக்கப் பட்டுள்ளனா். இந்தப் பணியாளா்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ. 50 வழங்கப்படுகிறது. ஆனால், இந்த குறைந்த ஊதியத்தைக் கூட 7 மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்து வருவதாகக் தெரிவிக்கின்றனர்.
காங்கேயம்; அரசுப்பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு 7 மாத சம்பள பாக்கி