திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி:


ஜெர்மனியில் நடந்த இரு துப்பாக்கிச் சூடு சம்பங்களில் 8 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.


இதுகுறித்து ஜெர்மனி போலீஸ் அதிகாரிகள் தரப்பில், ''ஜெர்மனியின் ஹனாவ் நகரில் புதன்கிழமை இரவு இரு மதுபானக் கூடங்களில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.


இதில் 8 பேர் பலியாயினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் இறங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட முக்கிய நபர், அவர் இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் ஜெர்மன் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image