டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் இன்று காலை 10 மணி அளவில் டெல்லி முதல்-மந்திரியாக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் அவருடைய பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, டெல்லி பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் முதல் டாக்டர்கள் வரை என்று டெல்லியின் கட்டமைப்புக்கு உதவி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.