பந்தலூரில் கொரோனோ வைரஸ் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

பந்தலூரில் கொரோனா வைரஸ் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



கூடலூர் அரசு கலை கல்லூரி நாட்டு நலபணி திட்டம், நெல்லியாளம் நகராட்சி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாட்டு நலபணி திட்ட அலுவலர் சைலஜா தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், மஹாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரனோ வைரஸ் குறித்து விளக்கமளித்தார்.  கோரனோ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.  மாணவர்கள் உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்து கூறி சுத்தமாக, சுகாதாரமாக வாழ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.



தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து துவக்கி வைத்தார்.


புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பழைய பேருந்து நிலையம், அரசு மேல் நிலை பள்ளி, வழியாக நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் விளக்கம் அளித்தார்.



தொடர்ந்து வருவாய் அலுவலர் அலுவலகம், மாரியம்மன் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மை படுத்தினார்கள். முகாமில் நாட்டு நல பனி திட்ட அலுவலர்கள் கார்த்திக், சிவசங்கரன் மற்றும் நாட்டு நலபணி திட்ட மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image