திருப்பூர் மாவட்டம், தெக்கலூர் ஊராட்சியில் நடைபெறும் ரூர்பன் திட்ட பணிகளை மாநில ஊரக வளர்ச்சிித்துறை இயக்குனர் கே.எஸ்.பழனசாமி ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் நகர்புறத்திற்கு இணையான வசதிகளை கிராம பகுதியில் மேம்படுத்த மத்திய அரசு ரூர்பன் திட்டத்தை அறிமுக படுத்தி கிராமங்களை செழுமையாக்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெக்கலூர் ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சாலை பணிக்கு ரூ 35 லட்சமும், சோலார் மின்கட்டமைப்பு பணிக்கு ரூ 10 லட்சமும் ஒதுக்கி, தற்போது அப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின் போது மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், பொறியாளர்கள் கணேசன், கோகுல், தெக்கலூர் ஊராட்சி தலைவர் மரகதமணி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.