திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் 2010 ம் ஆண்டில் 30000 சதுர அடியில் கலையரங்கம் தமிழகரசு மற்றும் நகராட்சியால் ₹1.20 கோடியில் கட்டப்பட்டது.இதில் ₹ 5000 சதுர அடி மேடை போக 25000- ம் சதுர அடியில் மண் தளமாகவே விடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மண் தளமாக இருந்ததால் மாணவிகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருமல், மூக்கடைப்பு போன்றவைகள் ஏற்பட்டன.
ஒரு விழாவிற்காக பள்ளிக்கு வருகை தந்த மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட் திரு.டாக்டர் கந்தசாமி மற்றும் பிரைம் டெக்ஸ் கோவிந்த ராஜன் இருவரும் இணைந்து 25000- ம் சதுர அடிக்கு₹35 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைத்து கொடுத்தனர். இதனை இன்றுதிருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் விஜய் கார்த்திகேயன் திறந்து வைத்தார்..